கவிதையின் க(வி)தை

 


 



மனதின் உரையில்
சேகரித்த விதையை
அறிவு வயலிலே
 பண்படுத்தி...
 பதப்படுத்தி...
 முறைப்படுத்தி...
விதைத்த - புது
விதையின்
விளைச்சலே இந்த
மாயஜால புதுகவிதை!



காவிய களஞ்சியத்தில்
கட்டப்பட்ட கதிர்களை
மூளையின் முயற்சியில்
 உலர்த்தப்பட்டு...
 சலிக்கப்பட்டு...
 தூற்றப்பட்டு...
சேர்த்த - பழைய
அறுவடையின்
பலனே இனிய
தேன்சுவையுடைய மரபுக்கவிதை!



சின்னஞ்சிறு விதைகளை
இரையாக எண்ணி
கொத்தி தின்னும் இதயப்பறவை!
 முறுக்கேற்றி...
 அரங்கேற்றி...
 செயலாற்றி...
சொல்லும் சிப்பின் முத்து
ஜொலிக்கும் வைரம்
கூர் மழுங்காத கத்திமுனையே!
குறுகிய ஹைக்கூ கவிதை!



இந்திய நாட்டில்
நிலைத்த தமிழ் கரும்பை 
கற்பனை வெடிப்பில்
 சுவைத்து...
 இனித்து ...
 படித்து...
கோர்த்த இலக்கிய
புத்தகத்தின்
அமைப்பே அழகிய
நுண் அறிவான தமிழ்கவிதை!


அனுபவம் அளித்தது
தேடிச் சேர்த்தது
இதுவரை அறியாத
 மணமும்...
 குணமும்...
 பலமும்...
மூலம் மறுரூபமான
மண்ணிலே கண்டிடாத
கரும்மேகம் போல
ஒன்றிணைந்து இருமனம்
பேசும் மௌனமாய்
என்றும் இனிக்கும் காதல் கவிதை!


                      -கவிஞர்.எம்.ஜேம்ஸ்