கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த அருதங்குடி மாரியம்மன் கோவில் தெருவில் பல ஆண்டுகளாக அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரை கால்வாயில் பிடிக்கும் அவல நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் வாய்க்கால் ஒட்டியே குடிநீர் பிடிக்கும் குழாய் பழுப்புகளும் அமைக்கப்பட்ட மிகவும் அவலமான நிலையில் உள்ள குழாய் தண்ணீரையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி குடி தண்ணீர் பிடிக்கும் இடமும், கழிவுநீரால் நிரம்பி விடுகிறது. இத்தண்ணீரை பயன்படுத்தும் இந்த தெரு மக்களுக்கு அடிக்கடி பல்வேறு விதமான நோய்களும், அங்கு துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான கோரிக்கையை பலமுறை, கிராம செயலாளர் திரு.முருகன் அவர்களிடமும், ஊராட்சி நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்றும் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கால்வாய் முறையாக மூடப்பட்டு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழ்வு வேண்டும் என மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
கழிவுநீர் கால்வாயில் குடிநீரை பிடிக்கும் கிராம மக்களின் அவலம்!